இலங்கை

யாழில் சிரட்டை உற்பத்தி பொருட்களை பார்வையிட்ட அமைச்சர் அருந்திக்க!

தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ இன்று கோப்பாயிலுள்ள (crafttary) கிறோப்ரறி எனப்படும் மரம் மற்றும் சிரட்டைகளைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்

நீண்டகாலமாக கோப்பாய் பகுதியில் சிரட்டை மற்றும் மரங்களைக் கொண்டு பல்வேறு வகையான கலை அலங்காரப் பொருட்களை வடிவமைத்து வருகின்றன தனியார் ஒருவரின் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்.

இதன்போது அங்கு உரையாற்றிய அமைச்சர் சந்தை வாய்ப்பினை மேற்கொள்வதற்கும் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தருவதாகவும் குறித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு உறுதியளித்தார்.

இதனை அடுத்து  இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் 601 குடும்பங்கள் பாதிப்பு!

Pagetamil

வீட்டில் முடங்கியிருந்த விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞன்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil

22 இந்திய மீனவர்கள் விடுதலை: படகு பறிமுதல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!