ரஷ்யாவில் 60% பேர் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விரும்பவில்லை!

Date:

ரஷ்யாவில் சுமார் 60வீதமானவர்கள் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறது என பல்வேறு நாடுகளுக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள 60% ரஷ்யர்கள் விரும்பவில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லிவேடா மையம் நடத்திய ஆய்வில், சுமார் 60% ரஷ்யர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள விரும்பவில்லை. காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படுவதால் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள தயங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரஷ்யாவில் 35 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இலங்கை இன்று அனுமதியளித்துள்ளது. அடுத்த வாரம் இலங்கைக்கு முதற் தொகுதி ஸ்புட்னிக் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04...

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர்...

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு’ திறந்து வைப்பு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டிஜிட்டல் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றும் நோக்கில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்