பெற்ற மகளை தலை துண்டிக்க கொலை செய்ததோடு, துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு பட்டப்பகலில் தந்தை தெருவில் நடந்து சென்ற கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷ்குமார் என்பவர், தனது மகளின் காதல் விவகாரம் பிடிக்காமல், இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மகளை கொலை செய்ததோடு, தலையை துண்டித்து, கையோடு எடுத்துக் கொண்டு காவல் நிலையம் நடந்து சென்றுள்ளார்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் பட்டப்பகலில் அவர் நடந்து செல்வதை கண்டு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1