ரஷ்யாவில் சுமார் 60வீதமானவர்கள் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறது என பல்வேறு நாடுகளுக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள 60% ரஷ்யர்கள் விரும்பவில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லிவேடா மையம் நடத்திய ஆய்வில், சுமார் 60% ரஷ்யர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள விரும்பவில்லை. காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படுவதால் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள தயங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரஷ்யாவில் 35 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இலங்கை இன்று அனுமதியளித்துள்ளது. அடுத்த வாரம் இலங்கைக்கு முதற் தொகுதி ஸ்புட்னிக் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.