இந்துப்பு தற்போது உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடியது என்று எல்லோரும் இந்துப்புவுக்கு மாறிவருகிறார்கள்.
கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில் அயோடின் உடன் சில இரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. இந்துப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இயற்கை தன்மையோடு கிடைக்கிறது.
இந்துப்பு செய்யும் ஆரோக்கிய நன்மைகளில் முக்கியமானது உடலை நீர்த்தன்மையோடு வைத்திருப்பது. இதனால் உடல் டீஹைட்ரேஷன் ஆகாமல் இருப்பதோடு அது சருமத்துக்கும் நன்மை அளிக்கிறது. நீர்ச்சத்தோடு சருமம் இருந்தாலே சருமம் பளிச்சென்று பொலிவாக மினுமினுப்பாக இருக்கும்.
சருமத்தில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு முகத்தில் முகப்பருக்களும் வரக்கூடும். சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரிப்பதால் உண்டாகும் இதை சரி செய்ய இந்துப்பு உதவுகிறது.
இந்துப்புவை பயன்படுத்தும் முறை
இந்துப்புவை பொடித்து தேனில் கலந்து நன்றாக சேர்த்து கலக்கவும். இதை முகம் முழுக்க தடவி மென்மையாக தடவுங்கள். அழுத்தம் வேண்டாம். முகத்தை 20 நிமிடங்கள் வரை உலரவிட்டு எடுத்தால் அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படும். சருமம் தேன் கலப்பதால் பொலிவும் பெறக்கூடும்