காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் இன்று (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பனவே இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் காத்தான்குடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த டிசம்பரம் 31ஆம் திகதி முதல் காத்தான்குடி பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21ஆம் திகதி காத்தான்குடியின் 8 கிராம அலுவலர் பிரிவுகளும், அதன் பின்னர், 40 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கடந்த பெப்ரவரி 09ஆம் திகதியும் என, இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்ட நிலையில், 4 வீதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது, குறித்த 4 வீதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.