26.2 C
Jaffna
December 18, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

க.பொ.த சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்று (1) ஆரம்பிக்கிறது. எதிர்வரும் 11 ஆம் திகதிவரை பரீட்சைகள் நடைபெறும். இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பிக்கிறது.

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 622,352 மாணவர்கள் தோற்றவுள்ளனர். 423,746 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 98,606 தனியார்பரீட்சார்த்திகள் இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த மேற்படி பரீட்சை நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இன்று ஆரம்பிக்கிறது.

பரீட்சை நிலையங்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு முழுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு பரீட்சை ஆரம்பிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 4513 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன் 542 இணைப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. 

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இணைப்பு மத்திய நிலையங்கள் என 40 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தந்த பகுதிகளில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அது தொடர்பில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இம்முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிற்கு, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் புஜித சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு பரீட்சையும் தொடங்குவதற்கு குறைந்தது 45 நிமிடங்களுக்கு முன்னதாக மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பல பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளன, எனவே மாணவர்கள் பரீட்சை தொடங்குவதற்கு முன்பே அந்தந்த மையங்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பரீட்சை எழுத ஒவ்வொரு மையத்திலும் ஒரு பிரத்யேக வகுப்பறை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களையும், கடமையில் உள்ள பணியாளர்களையும் அந்தந்த பரீட்சை மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை சிறப்பு போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் துணை பொது மேலாளர் பந்துல ஸ்வர்ணஹன்சா, ; சிசு செரிய திட்டத்தின் கீழ் 750 பேருந்துகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டால், அந்தந்த பகுதி மேலாளர்களிடம் கோரிக்கை வைக்க முடியும்.  தங்கள் பிராந்திய அலுவலகங்களுக்கு கோரிக்கைகள் வந்தால் கூடுதல் பேருந்துகளை பணியில் ஈடுபடுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து க.பொ.த. சாதாரணதர பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். பரீட்சையை பாதுகாப்பாக நடத்துவதற்காக ரூ .50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜூன் மாதத்திற்குள் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கும், ஜூலை மாதத்தில் உயர்தர வகுப்புகளைத் தொடங்குவதற்கும் நம்புவதாக கல்வி அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

Leave a Comment