இலங்கை சுதந்திரக்கட்சி தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக கைகோர்க்க வேண்டுமென ஜனநாயக சக்திகளையும் தேசபக்தர்களையும் கேட்டுக்கொள்வதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுடன் பேசிய அவர், சில குழுக்கள் சுதந்திரக்கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சதியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். கடந்த தேர்தலின் பின்னர் இத்தகைய முயற்சிகள் ஆரம்பித்தாக தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பெதுஜன பெரமுன இடையேயான முதல் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுடன் இதுபோன்ற முயற்சிகள் தொடங்கியதாக அவர் குற்றம் சாட்டினார், அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் தேசிய பட்டியல் பதவிகளை வழங்குவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
இலங்கை சுதந்திரக் கட்சி தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள், கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றவும் தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது என்றார்.