மரணவீட்டில் ரணகளம்: 6 பேர் வைத்தியசாலையில்!

Date:

சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில் ஆச்சிபுரம் மற்றும் மதுராநகரை சேர்ந்த இரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கிடையே ஆரம்பத்தில் ஏற்பட்ட வாய் தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இச் சம்பவத்தில் 20, 22, 25, 28, 30 ஆகிய வயதினையுடைய ஆச்சிபுரத்தினை சேந்த நால்வரும் மதுரா நகரினை சேர்ந்த இருவரும் காயமடைந்துள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பாக சிதம்பரபுர பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை...

வசந்த முதலிகேவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிப்பு

2022ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டக் காலத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்...

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து 3 நாட்கள் சேவையில் ஈடுபட தடை!

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்