அரச இலக்கிய விருது பெற்ற எழுத்தாளரான ரீ.எஸ்.யோசுவாவின்
படைப்பிலுருவான இரு நூல்களான ‘குறிஞ்சாளினி’ சிறுகதை நூல்,
‘பந்தயத்தேவன்’ நாவல் வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் 03.00 மணிக்கு,
கிளிநொச்சியில் வெளியிடப்பட்டுள்ளன.
நிகழ்விற்கு திருமதி பிறேமா மதுரநாயகம் தலைமை வகித்து தலைமையுரை
நிகழ்த்தினார். வரவேற்புரையினை கலாபூஷணம் சிவ.ஏழுமலைப்பிள்ளை வழங்கினார். வாழ்த்துரையினை க.பங்கையற்செல்வன் வழங்கினார்.
தொடர்ந்து ‘முதலடி இயற்கையாகி’ என்ற தலைப்பில் ‘குறிஞ்சாளினி’ சிறுகதை
நூல் பற்றிய தேடல் இடம்பெற்றது. இதன் அறிமுகவுரையினைஅதிபர் ஜோயல்
பியசீலனும், நூல் பற்றியதான இலக்கியப் பார்வையினை கவிஞர்
கருணாகரனும், நூலின் சமூகப்பயன்பாடு பற்றி எஸ்.தேவதாஸூம்
உரையாற்றினார்கள்
‘குறிஞ்சாளினி’ நூலினை ஜோயல் பியசீலன் வெளியிட்டு வைக்க,
முதற்பிரதியினை செளந்தரராஜன் பெற்றுக்கொண்டார். ‘பந்தயத்தேவன்’ நூலினை
யோ.புரட்சி வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை சுந்தரவள்ளி
பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ‘பந்தயத்தேவன்’ நாவல் பற்றிய இலக்கியத்தேடல் ‘வாழ்வதன் கடைசி
எய்தல்’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. நூலின் அறிமுகவுரையினை யோ.புரட்சி, நூல் பற்றிய இலக்கியப் பார்வையினை தமிழ்க்கவி, நூலின் சமூகப்பயன்பாடு பற்றிய பார்வையினை பெருமாள் கணேசன் உரையாற்றினர். ஏற்புரையினை இருநூல்களினதும் ஆசிரியர் ரீ.எஸ்.யோசுவா வழங்கினார்.
தொடர்ந்து இயற்கைவழி விவசாயத்தின் அதீத அக்கறையாளர்கள், நிகழ்வில்
இலக்கியத்தேடல் வழங்கியவர்கள் ஆகியோருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.