மேலும் 5 கொரோனா மரணங்கள்!

Date:

கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் அறிவித்தலின்படி, நாட்டின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 464 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்-

நவதகல பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், கராபிட்டி போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர சிறுநீரக பிரச்சினை மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகாம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் சிறுநீரகம் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 09 (தெமட்டகொடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 71 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, கொவிட்-19 நிமோனியா, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 71 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, குருதி விஷமடைவு அதிர்ச்சி மற்றும் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்