தமிழ் அரசியல், மத, சிவில் தரப்பிற்கிடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்!

Date:

தமிழ் அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் குழுக்கள் என்ற பெயரில் இயங்குபவர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது.

இறம்பைக்குளத்தில் சந்திப்பு ஆரம்பித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தம் கருணாகரன், வினோ நோகராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சி, வேலன் சுவாமிகள், திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல் ஆண்டகை, மன்னார் ஆயர் இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை, யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்  ஜெபரட்ணம் அடிகளார், தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, அனந்தி தரப்பினர் இதில் கலந்து கொள்ளவில்லை.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்