இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடனுதவி அளித்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்று திரும்பியிருந்தார். இரண்டு நாள் பயணத்தில் பாகிஸ்தான் – இலங்கை இடையேயான உறவை வலுவாக்குவது குறித்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார் இம்ரான். சில ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரையும் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து ஆலோசித்தார்.
தனது இரண்டாவது நாள் பயணத்தில் இலங்கைக்கு சுமார் 50 மில்லியன் டொலர் கடனுதவிதி அறிவித்திருக்கிறார் இம்ரான் கான்.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு சுமார் 50 மில்லியன் டொலரை கடனாக அறிவித்திருக்கிறார்.
பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்துறை பகிர்வு தொடர்பான விஷயங்களை கையாள்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் வலுவான உறவு தேவை என்பதை இரு தரப்பு அரசுகளும் இச்சந்திப்பில் வலியுறுத்தி உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.