இராணுவத்தி்ற்கு சொந்தமான சொகுசு வாகனத்தில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட போது இராணுவச்சீருடையில் காணப்பட்டனர்.
அருகொட சாலித என்ற பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ .450 மில்லியனுக்கும் அதிகமான ஹெராயினுடன் அவர்கள், ஹொரண, திகேனபுர பகுதியில் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
தெற்கு மாகாணத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் பாதாள உலகத் தலைவரான மிதிகம சிந்தக அல்லது ‘ஹரக் கட்டா’ என்பவரிடமிருந்து போதைப்பொருட்களைப் பெற்ற பின்னர், ஹொரண, திகேனபுர பகுதியில் உள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து திரும்பி வரும்போது இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இராணுவத்திற்கு சொந்தமான சொகுசு வாகனத்தில் 45 கிலோவிற்கு அதிகமான போதைப்பொருட்களை கொண்டு செல்லும்போது சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது இரு வீரர்களும் இராணுவ சீருடை அணிந்திருந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
அட்டீடிய மற்றும் மருதானை இராணுவ முகாம்களை சேர்ந்தவர்கள் என்பதும், வாகனம் அட்டீடியா இராணுவ முகாமில் உள்ள ஒரு படைப்பிரிவுக்கு சொந்தமானது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இராணுவத் தேகை்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனமே அது.
கைதானவர்களில் ஒருவர் இராணுவத்தை விட்டு தப்பியோடியவர் என்றும், மற்றைய அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமென இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.