டுபாயிலுள்ள ஹொட்டல் ஒன்றில் 23 கரட் தங்கத்துடன் உலகின் மிகவும் விலை உயர்ந்த பிரியாணி பரிமாறப்படுகிறது. இதன் விலை இலங்கை மதிப்பில் 52,000 ரூபாயாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் உள்ள Bombay Borough ஹொட்டலில்த்தான் அந்த விலை உயர்ந்த பிரியாணி பரிமாரப்படுகிறது. த ரோயல் கோல்ட் பிரியாணி என்று கூறப்படும் அந்த பிரியாணியில் 23 கரட் உட்கொள்ளக் கூடிய தங்கம் வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பிரியாணி அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இதன் விலை அமீரகத்தின் கரன்சியில் 1000 திராம்கள். இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.52,800.00 ஆகும். பிரியாணியில் பரிமாறப்படும் 23 கரட் தங்கமானது இலை வடிவில் மிகவும் மெல்லியதாக மாற்றப்பட்டு உணவுக்கு மேலே அலங்காரமாக வைக்கப்படுகிறது.
பிரியாணியின் மேலே சாப்பிடக்கூடிய வகையிலான 23 கரட் தங்க இலை, சிக்கன் கபாப், குங்குமப்பூ போட்டு சமைக்கப்பட்ட சாதம், காஷ்மீரின் செம்மறி ஆட்டுக்கறி கபாப், டெல்லியின் புகழ் பெற்ற செம்மறி ஆட்டு சாப்ஸ், ரஜபுத்திரர்களின் சிக்கன் கபாப், முகலாயர்கள் ஸ்டைல் கோப்தா, மலாய் சிக்கன் ரோஸ்ட் போன்றவை இந்த இந்த ரோயல் கோல்ட் பிரியாணி தட்டில் இடம் பெற்றுள்ளன.
இந்த பாம்பே பாரோ ஹொட்டலானது டுபாய் இன்டர்நஷனல் பைனான்சியல் சென்டரில் அமைந்துள்ளது. இந்த ரோயல் பிரியாணியை ருசிக்க ஏகப்பட்ட நபர்கள் ஹொட்டலுக்கு வரத் தொடங்கியுள்ளனராம்.
https://www.instagram.com/p/CLa9j3uJ4Hb/