25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
சினிமா

சாயிஷாவுக்கு முதல் அவரது அம்மாவை உஷார் செய்த ஆர்யா!

தமிழ் சினிமாவில் ப்ளேபாய் நடிகராக சுற்றிக் கொண்டிருந்தவர் நடிகர் ஆர்யா. விஷால், சிம்பு என தமிழ் சினிமாவிலிருந்த முரட்டுச் சிங்கிள்ஸ் சங்கத்தில் நிரந்தர அங்கத்துவம் எடுக்கிறேன் என்பதை போல திரிந்தவர் ஆர்யா.

என்ன மாயமோ, மந்திரமோ, திடீரென தன்னைவிட 15 வயதுக்கும் குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது சாயிஷாவுடன் காதல் மலர்ந்து, திருமணம் ஆனதெல்லாம், தமிழ் சினிமாவில் ஒரு பாடல் காட்சியில் நடப்பதை போல திடுதிப்பென முடிந்து விட்டது.

சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்தது, பலரின் வயிற்றெரிச்சலை வேறு கிளப்பி விட்டது.

ஏற்கனவே ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் வாயிலாக தனக்கு பெண் தேடியிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை கடைசியில் பிடிக்கவில்லை என ரிஜக்ட் செய்து விட்டார். இந்த நிகழ்ச்சி பல்வேறு விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

இதெல்லாம் தெரிந்தும் சாயிசா எப்படி காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் என்ற கேள்வி அனைவருக்குமே இருந்தது. பச்சை மண்ணும், சுட்ட மண்ணும் மாதிரி இருந்த இருவரும் எப்படி ஒட்டினார்கள் என்பது கோலிவுட் வட்டாரங்களிலும் புரியாத புதிராகவே இருந்தது.

இதற்கான விடையை சமீபத்தில் ஆர்யாவே தெரிவித்துள்ளார்.

அதாகப்பட்டது, ஆர்யா கன்ணுகுட்டிக்கு வலை வீசாமல் நேரடியாக பசுமாட்டிற்கு வலைவீசி கன்னுக்குட்டியை பிடித்தாராம்.

சாயிஷாவில் காதல் வந்ததும், அதை சாயிஷாவிடம் சொல்லவில்லையாம். நேராக, சாயிஷாவின் அம்மாவிடம் போய் காதலை சொல்லியிருக்கிறார்

சாயிஷா இல்லாமல் இருக்க முடியாது, அவரை நன்றாக பார்த்துக் கொள்வேன் என உத்தரவாதமும் கொடுத்தாராம். ஆனாலும், அவரும் உடனேயே அசரவில்லை.

அதன்பின், சாயிஷாவின் அம்மாவை எங்கு பார்த்தாலும் காதலை சொல்லி விடுவாராம். அதாவது, மகள் மீது.

ஆர்யாவின் சின்ஷியாரிட்டி காதல், சாயிஷாவின் அம்மாவிற்கு பிடித்துப்போக, மகள் சாயிசாவை கன்வின்ஸ் பண்ணி அவரே காதல் திருமணம் செய்து வைத்துள்ளாராம்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment