கோட்டாவிற்கு கட்சி தலைமை வழங்கப்பட வேண்டும்: விமல்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கட்சித் தலைமை பதவி வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும், தற்போதைய அரசை ஆட்சிக்கு கொண்டு வர உதவிய பௌத்த பிக்குகளிற்கும் இடையே நேற்று மாலை ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடல் ஸ்ரீ அபயராம விகாரையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு அரசியல் பலத்தை வழங்குவதற்காக கட்சிக்குள் தலைமைப் பதவியை வழங்க வேண்டும் என்றார்.

பொது ஆணையுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் பொருத்தமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிக்குகள் இருந்ததாகவும் அமைச்சர் வீரவன்ச கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் உதய கம்மன்பில, அரசாங்கம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள் குறித்து வெளிப்படையான கலந்துரையாடலை நடத்தியதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

வெளி சக்திகளால் உருவாக்கப்பட்ட உள் சவால்களும் உள் மற்றும் வெளிப்புற சவால்கள் உள்ளன. அதன்படி எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டன என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்