விசேட அதிரடிப்படையினரை போல ஆள் மாறாட்டம் செய்து கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியகம, கொட்டுன்ன பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ .58,000 பணம், நான்கு மொபைல் போன்கள் திருடப்பட்டது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இந்த குழு கைது செய்யப்பட்டது.
அந்த வீட்டின் தோட்ட பகுதியை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்கள்.
சந்தேக நபர்கள் இன்று மகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இப்படியான கொள்ளைக்குழுக்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமைக்கு சென்றாலும், அவர்கள் கடமை அடையாள அட்டையை வைத்திருப்பார்கள் என்பதை பொதுமக்களிற்கு நினைவூட்டினார்.