தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நயன்தாரா. தற்போது நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை அவர்தான். அந்த அளவிற்கு இவர் படத்தின் மீதான வரவேற்பும் ஆதரவும் கூடிக்கொண்டே போகிறது.
இந்த இடத்திற்கு நயன்தாரா இலகுவாக வந்து சேரவில்லை. ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு மனசினக்கரே என்ற படத்தில் ஜெயராமின் ஜோடியாக நயன்தாரா முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை ஜெயராம் இணையத்தளத்தில் பதிவிட அது காட்டு தீ போல் பரவியது.
நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ஐயா. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
ஐயா படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தின்இயக்குனர் ஹரி, நாயகியாக ஒரு குடும்ப பாங்கான பெண்ணை தேடியுள்ளார். அதற்காக பிஆர்ஓ ஜான்சன் இடம் ஏதாவது குடும்பப்பாங்கான முகம் கொண்ட நடிகைகள் இருந்தால் கூறுங்கள் என கூறியுள்ளார்.
ஜான்சன் அவரது நெருங்கிய நண்பரான கேரளா பத்திரிகையில் பணியாற்றி வரும் அஜய் என்பவரிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். அப்போது அஜய் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களை கொடுத்துள்ளார். அதனை ஹரியிடம் அனுப்பியுள்ளனர், அதன் பிறகுதான் ஐயா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐயா படத்துக்கு பிறகுதான் நயன்தாராவின் மார்க்கெட் எங்கேயோ போனது. அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் தமிழில் குவிய தற்போது வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.