O/L மேலதிக வகுப்புக்கள் இன்று நள்ளிரவு முதல் தடை!

Date:

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுவது இன்று (23) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும்.

2020 O/L பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துவது பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான மாதிரி ஆவணங்களை அச்சிட்டு விநியோகிப்பதும் இந்த காலகட்டத்தில் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விதி மீறல்கள் நடப்பதை பொது மக்கள் அறிந்தால் பொலிஸார் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கலாம்.

2020 O/L பரீட்சை மார்ச் 1 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி நிறைவடையும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்