21 வயது யுவதியை அள்ளிச் சென்ற அடையாளம் தெரியாதவர்கள்!

Date:

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிறகு வெள்ளை வான் ஒன்றில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (23) அதிகாலை வீட்டை உடைத்து தாக்குதலை நடாத்திவிட்டு நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காதான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரு பெண் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டை சம்பவ தினமான இன்று அதிகாலை ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினர் வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து வீட்டின் வாசல்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கிய போதும் அவர்கள் அவரை திருப்பி தாக்கிவிட்டு நித்திரையில் இருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்