மேற்கிந்தியத்தீவுகளுடனான தொடருக்காக இலங்கை அணி வீரர்கள் இன்று நாட்டை விட்டு புறப்பட்டு சென்றாலும், ரி 20 அணி தலைவர் தசூன் ஷானக்க இன்று மேற்கிந்தியாவிற்கு பயணிக்கவில்லை.
இன்று அதிகாலை 3.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -669 என்ற விமானத்தில் இலங்கை அணி புறப்பட்டுள்ளது.<
இந்த விமானத்தின் மூலமாக கட்டாரின் தோஹாவைச் சென்றடையும் இலங்கை அணி, அங்கிருந்து மற்றொரு விமானத்தினூடாக மேற்கிந்தியத்தீவுகளை சென்றடையவுள்ளது.
இந் நிலையில் தசூன் ஷானக்க தனது கடவுச்சீட்டை தவறவிட்டதன் காரணமாக விசா வழங்குவதில் எழுந்த சிக்கல் நிலைமை காரணமாக அவர் ஏனைய வீரர்களுடன் இணைந்து பயணிக்கவில்லை.
ஷானகவின் விசா பிரச்சினையை விரைவில் நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததும் அவர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஏனைய வீரர்களுடன் அணியில் இணைந்து கொள்வார்.