Pagetamil
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உபுல் தரங்க!

இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் இன்று மிகச்சுருக்கமாக வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவை அறிவித்துள்ளார்.

36 வயதான தரங்க, 2005ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்வதேச அறிமுகத்தை பெற்றார். அதே ஆண்டில், இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார்.

2017 இல் கடைசி டெஸ்ட்டையும், 2019 இல் கடைசி ஒரு நாள் போட்டிகளையும் ஆடியிருந்தார்.

அறிமுகமாகிய புதிதில் இலங்கையின் எதிர்கால துடுப்பாட்ட நட்சத்திரமாக விதந்தோப்பட்ட போதும், பின்னாளில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை சீராக இருக்கவில்லை. அடிக்கடி ஆட்ட்த்திறனை இழந்ததால், இறுதிக்காலங்களில் அணியில் இடம்பிடிக்கவில்லை.

இருந்தாலும் இலங்கைக்காக சில காவிய இன்னிங்சையும் அவர் ஆடியுள்ளார். 2006 இல் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக ஒரு நாள் போட்டியில், 321 என்ற இலங்கை விரட்ட களமிறங்கிய சனத் ஜயசூரியவு- உபுல் ஜோடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 286 ஓட்டங்களை பெற்றனர்.

பின்னாளில் அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தாலும் அவரால் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!