சீரியல் நடிகையும் பிக்பாஸ் பிரபலமான சிவானியுடன் இருந்த தொடர்பு காரணமாகவே தனது மனைவி விவாகரத்து செய்து விட்டதாக வெளியான தகவல்களை பிரபல சீரியல் நடிகர் அசீம் மறுத்துள்ளார்.
பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஆசீம்
மற்றும் ஷிவானி நாராயணன். இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
ஆனால் அது குறித்து இருவரும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஆசீம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சிவானியால் அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது. அதனால்தான் அவரது மனைவி சமீபத்தில் அவரை விவாகரத்து செய்ததாகவும் தகவல்கள் வந்தன.
ஆனால் அசீம் அதை முற்றிலும் மறுத்துள்ளார். எனக்கும் என் மனைவிக்கும் சொந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் விவாகரத்து நடை பெற்றது, சிவானிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“சிவானி மற்றும் என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்“ எனவும் சமூகவலைதளத்தில் வாயிலாக ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அசீம் முதலில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக கலந்துகொள்ள இருந்ததாக இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற காரணம் தற்போது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிவானி நாராயணன் மற்றும் ஆசிம் இருவரும் மீண்டும் இணைந்து ஒரு சீரியலில் நடிக்க உள்ளதாகவும், இதன் காரணமாகவே சர்ச்சைகள் கிளம்பியதாகவும் விஜய் டிவி வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.