கழிவு தேயிலை சிக்கியது!

Date:

பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றச்செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (22) கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இரு சந்தேக நபர்களையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

அக்கரபத்தனை, போபத்தலாவ பகுதியிலிருந்து குறித்த கழிவுத் தேயிலை தூள் கம்பளைக்கு கொண்டுசெல்லப்படவிருந்தது. பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வைக்கப்பட்ட பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைத் தூளும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

–க.கிஷாந்தன்–

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்