கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் மற்றும் ஒரு இத்தாலிய காவல்துறை அதிகாரி இன்று திங்கள்கிழமை கொங்கோவில் கொல்லப்பட்டனர். ஐ.நா அமைதி காக்கும் படையணியின் வாகனத் தொடரணியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
கன்யாமஹோரோ நகருக்கு அருகே காலை 10:15 மணியளவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி மேற்கொண்ட குழுவினரின் தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் நிகழ்வொன்றிற்காக சென்ற சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.
நீண்டகால ஆயுதப் போர் நடந்த கொங்கோவில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1