நாட்டில் நேற்று 519 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 79,999 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 495 பேர், மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணி 75,923 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
5,255 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 843 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,299 ஆக உயர்ந்தது.
COVID-19 தொற்று சந்தேகத்தில் 609 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.