Pagetamil
மலையகம்

இளைஞரை கடத்திய 3 பேர் கைது!

பலாங்கொடையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், மூவர் நேற்று (21) பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 4ஆம் திகதி இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர், செல்லும் வழியில் தப்பித்து யட்டியாந்தொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளாரென பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment