முல்லைத்தீவு கேப்பாபிலவு படையினரின் முகாமிற்கு முன்னால் செல்லும் மக்களின் பொது போக்குவரத்து வீதி ஊடாக பயணித்த பொதுமகன் மீது படை அதிகாரிஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
நேற்று (18) இரவு 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு- வற்றாப்பளை வீதி ஊடாக உந்துருளியில் பயணித்த வேளை உந்துருளியின் பின்னால் வந்த கப் வாகனம் கேப்பாபிலவு படையினரின் படை முகாம் வாயிலை கடந்து 500 மீற்றர் தூரம் வரை பயணித்த தறுவாயில் உந்ருளியில் பயணித்த பொதுமகன்களை மறிந்த கப் வாகனத்தினர் அதில் இருந்து இரு துப்பாக்கி ஏந்திய படையினர் பாதுகாப்பு கொடுக்க சிவில் உடை தரித்த படை அதிகாரி உந்துருளி ஓட்டுனர்களை சிங்களத்தில் அவதூறாக பேசியவாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட உந்துருளியில் பயணித்த பொது மகன்கள் கேப்பாபிலவு வாயில் தளத்தில் உள்ள படை பொலீசாரிடம் முறையிட்டுள்ளார்கள்.
சிவில் உடை தரித்த படை அதிகாரி எந்த காரணமும் இன்றி உந்துளியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்திலும் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.