Pagetamil
இலங்கை

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளிற்குள் தீவிர கொரோனா: கம்பஹா நிலைமையேற்படுமா?

கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை குறித்த ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் 39 க்கு
மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால்
தொடர்ச்சியாக ஆடைத்தொழிற்சாலை இயங்கி வருகிறது என்றும் தெரிவிக்கும்
பொதுமக்கள், ‘பெரும்பாலும் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து
கிராமங்களிலும் இருந்தும் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்கள் சென்று
வருகின்றனர். இவ்விரண்டு ஆடைத்தொழிற்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான
இளைஞர்களும், யுவதிகளும் பணியாற்றுகின்றனர். எனவே இவர்களில்
ஏற்படுகின்ற பாதிப்பு மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்கள் மற்றும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களையும் பாதிக்கும். எனவே
இந்த விடயத்தில் சுகாதார பிரிவினர் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ எனவும்
கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை மாவட்ட சுகாதார பிரிவின் இளநிலை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கும்
போது ‘ஆடைத்தொழிற்சாலை ஒன்று தங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும்
மற்றையது சுகாதார துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும்
தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்களையும் கட்டாயப்படுத்தி பணிக்கு அழைப்பதான முறைப்பாடு தங்களுக்கு கிடைத்துள்ளது’ என்றும் தெரிவிக்கின்றனர்.

‘ஆனால் பொறுப்பான சுகாதாரதுறை உயரதிகாரிகள் இவற்றை கண்டுகொள்ளவில்லை’ என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

‘இதனால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில்
ஆடைத்தொழிற்சாலைக் கொரோனா கொத்தணி ஒன்று ஏற்படுமாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் குறித்த ஆடைத்தொழிற்சாலைகளது நிர்வாகத்தினரும் மாவட்ட மற்றும் மாகாண சுகாதாரத்துறை உயரதிகாரிகளுமே ஏற்க நேரிடும்’ என இளநிலை சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் ‘தாம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்றும் சுகாதார
துறையினருடன் ஒத்துழைத்து அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக
செயற்படுவதாகவும் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும்’ குறித்த
இரு ஆடைத்தொழிற்சாலைகளது நிர்வாகத்தினரும் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் நாளாந்தம் இந்த ஆடைத்தொழிற்சாலைளுடன் தொடர்புடைய புதிய புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன் இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு கம்பஹாவில் உள்ள ஒரு
ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் கம்பகா சுகாதாரத்துறை ஆகியோரது
அசண்டையீனமே காரணம் எனக் குற்றம்சாட்டப்படுவதும் இங்கு
குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!