இன்று (20) காலை சிலாபம்- ஆனமடுவ வீதியில் பல்லம-செருகல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தோட்டத் தொழில் துறை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கலந்து கொள்ளும் கிராம மக்களுடனான கலந்துரையாடலிற்காக கருவலகசெவ, நெலுமக பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது.
ஆனமடுவ- சிலாபம் வீதியில் செருகல வளைவுக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சொகுசு ஜீப் சாலையில் இருந்து விலகி மரத்தில் மோதியது.
விபத்துக்குப் பின்னர் இலேசான காயமடைந்த இராஜாங்க அமைச்சர் மற்றொரு வாகனத்தில் ஜனாதிபதியின் நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும், விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.