தம்புள்ள பொருளாதார மையத்திற்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொருளாதார மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொருளாதார மையத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் மற்றும் அதிர்ஷ்டலாப சீட்டுகளை விற்கும் நபர் ஆகியோர் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் கலேவெல, புலனாவெவ, தம்புள்ள, மொரகொல்ல, தம்புள்ள கம் உதாவ, வட்டகல தேவஹுவ உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பொருத்தமான சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள், அவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தம்புள்ள நகரசபை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.