மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினையாக இருந்த முறக்கொட்டாஞ்சேனை பாடசாலை காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினையாக இருந்த முறக்கொட்டாஞ்சேனை பாடசாலை காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 வருடமாக  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின்  இரண்டு எக்கர்  காணி  விடுவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 35 வருடமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த  பாடசாலை காணி கிளீன் ஸ்ரீலங்கா  நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்   அமைச்சர் மற்றும் ராணுவத்தினரால்  இன்றைய(30) தினம் மாவட்ட அரசாங்க அதிபரிடம்  உத்தியோக பூர்வமாக கையளித்தனர்

இதே வேளை குறித்த பாடசாலை ஆற்றங்கரையை அண்டிய  காணியில்  இயங்கி வந்ததுடன் மழை வெள்ளக் காலங்களில் மண்ணரிப்பு ஏற்படுவதால் பாடசாலை வளாகம்  ஆற்று நீரில் கலந்து மண்ணரிப்புக்குள்ளாகுவதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஏக்கர் கொண்ட பாடசாலை காணி பாடசாலையை அண்மித்த தனியார் காணிகளை சேர்த்து 1990 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் முகாமிட்டிருந்தன பின் இந்திய இராணுவம் வெளியேறியதை அடுத்து  இலங்கை ராணுவத்தின் பாவனையில் இருந்து வந்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இராணுவ முகாமுக்குள்  இருந்த தனியார் காணிகள், பாதை என்பன இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து பாடசாலை காணியை மட்டும் இராணுவம் தனது பயன்பாட்டில் வைத்திருந்தது . தேசிய மக்கள் சத்தி நாட்டை பொறுப்பேற்றதிலிருந்து வடக்கு கிழக்கில் இராணுவ பயன்பாட்டில் இருந்து  தனியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது  கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறித்த பாடசாலை காணி  இன்று இராணுவத்தினரால் அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில்   கைத்தொழில் அமைச்சர்  சுனில்   ஹெந்துல் நெத்தி ,  பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  அரசாங்க அதிபர் ஜே. அருள்ராஜ் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் J.S.P.W பல்லேகும்புர, 23வது காலாட்படை படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் G.P.Pகுணதிலக, மாகாண கல்வி பணிப்பாளர், பிரதேச செயலாளர், கல்குடா வலையக் கல்வி பணிப்பாளர், இராணுவத்தின் உயர் அதிகாரிகள் ,பிரதேச சபை உறுப்பினர் பொதுமக்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...

சீனாவை வந்தடைந்தார் ட்ரம்ப்

போட்டி வல்லரசுகளுக்கு இடையேயான ஆழ்ந்த பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், சீனத் தலைவர்...

அடை மழையால் ஒருவர் பலி: 200 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்