மாடல் அழகி தற்கொலை: முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்ன?

Date:

புதுச்சேரி காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் காந்தி மகள் சங்கரபிரியா (எ) சான் ரேச்சல் (26). மாடல் அழகியான இவர் மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழகம் 2019, குயின் ஆப் மெட்ராஸ் 2022, மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா 2023 என பல பட்டங்களையும் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டத்தையும் வென்றவர்.

இவர் அண்மையில் புதுச்சேரி 100 அடி சாலை ஜான்சி நகரைச் சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த ஜூன் 6-ம் தேதி இரவு சான் ரேச்சல், அளவுக்கு அதிகமாக தூக்க மத்திரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை உட் கொண்டு விட்டதாக தனது தந்தை காந்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காந்தி உடனடியாக தனது மகளை மீட்டு, புதுச் சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, சிகிச்சையில் இருந்து வந்த சான் ரேச்சல், மருத்துவரின் அனுமதியின்றி 8-ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 13-ம் தேதி சான் ரேச்சலுக்கு திடீரென கை, முகம் வீக்கம் அடைந்ததால் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

பிறகு மேல்சிகிச்சைக்காக கடந்த 20-ம் தேதி புதுச்சேரி ஜிப்ம ரில் சான் ரேச்சல் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுகுறித்து காந்தி அளித்த புகாரின் பேரில், உருளையன் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட சான் ரேச்சலுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததோடு, அவருக்கு கடன் பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே முழுமையான விசாரணைக்கு பின்னரே சான் ரேச்சல் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்