விபத்தில் காயமடைந்த 83 வயது முதியவரை ஆட்களற்ற பகுதியில் இறக்கிவிட்டு தப்பியோடிய சாரதி கைது!

Date:

லொறியில் மோதி படுகாயமடைந்த எண்பத்து மூன்று வயது முதியவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி லொறியில் ஏற்றி வெறிச்சோடிய இடத்தில் இறக்கிவிட்டு சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

பின்னர் அவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பூகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பூகொட பாப்பிலியாவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆபத்தான நிலையில் இருந்த நபரை விட்டுவிட்டு ஓடியதாக கூறப்படும் லொறி சாரதி ஹோமாகம, பன்னிபிட்டியவில் உள்ள அவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் அன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பூகொட பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபரை நடுவில் விடாமல், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால், அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரின் வீட்டிற்கு பொலிஸ் குழுவொன்று சென்ற போதும், விபத்தில் சேதமடைந்த லொறியை சரிசெய்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

பப்பிலியாவல, மெனிக்லந்த பிரதேசத்தில் வசித்து வந்த பியரத்ன மஞ்சநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

2027 வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (12) நாடாளுமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான...

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்