உலகின் மருந்தகமாக இந்தியா உதவியது – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!

Date:

கொரோனாவுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனியா ஆகிய நாடுகளின் தூதர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காணொலி காட்சி மூலம் சந்தித்தனர்.

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த பாடுபடுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், அவர்களிடையே காணொலி காட்சி மூலம் அவர் பேசியதாவது:-

உங்கள் அனைவரது நாடுகளுடனும் இந்தியாவுக்கு நல்லுறவு நிலவுகிறது. அமைதி, வளமை என்ற பொதுவான கண்ணோட்டத்தில் இந்த உறவு மிகவும் ஆழமானது.

கொரோனாவுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகத்தின் மருந்தகமே இந்தியாதான்.

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், அத்தியாவசிய மருந்துகளையும், உபகரணங்களையும் எண்ணற்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து இந்தியா உதவி இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்