கே.ஜி.எப். 2 படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல்!

Date:

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள ‘கே.ஜி.எப். 2’ படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எப்’. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை முதலில் ஜுலை 16  வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா 2-வது அலை காரணமாக படத்தின் பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் திகதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் பாகம் வெளியானதைப் போலவே கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் இப்படத்தை வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்குள் இயல்புநிலை திரும்பி, திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்துவிடும் என்பதால், கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வெளியிடுவது படத்திற்கு பிளஸ் ஆக அமையும் என படக்குழு கருதுகிறதாம்.

spot_imgspot_img

More like this
Related

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 9 மாதங்களில் 9,613 முறைப்பாடுகள்

இந்த ஆண்டின் (2026) முதல் ஒன்பது மாதங்களில், தேசிய சிறுவர் பாதுகாப்பு...

80 வயது மனிதனிற்கு சமமான காலம் கவந்திஸ்ஸ யானை உயிர்வாழ்ந்தது!

துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த, புகழ்பெற்ற...

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்