யாழ் பிரதேசமொன்றில் 2 மாதத்தின் பின் கொரோனா தொற்றாளர்: சித்தவைத்திய நிலையம் மூடப்பட்டது!

Date:

யாழ் மாவட்டத்தின், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று (29) இளம் பெண்ணொருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 மாதங்களின் பின்னர் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிறிதொரு நோய்க்காக சிகிச்சை பெற அந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் தொற்று உறுதியானது.

அவரிடம் சுகாதாரத்துறையினர் தடமறியும் விசாரணை செய்ததில், அவர் சித்தவைத்திய நிலையமொன்றில் சிகிச்சைக்கு சென்றது தெரிய வந்துள்ளது.

ஊர்காவற்துறையில் இயங்கிய சித்த வைத்திய நிலையம் ஒன்றிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தார். யாழ் புறநகரை சேர்ந்த ஒரு வைத்தியரே அங்கு சிகிச்சையளித்தார். அந்த பகுதியில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறையினர் இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

பிரதேச சுகாதாரத்துறையினரால் அந்த வைத்திய நிலையம் ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. மீள சிகிச்சைகளிற்காக திறப்பதற்கு முன்னர் சுகாதாரத்துறையினரை சந்திக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், அந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்காமல் சித்த வைத்திய நிலையம் இயங்கியதாக சுகாதாரத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அத்துடன், அந்த சிகிச்சை நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தல் நேற்று ஒட்டப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்