மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல ஆலங்களிலும் வருடாந்த உற்சவங்கள் மறு அறிவித்தல்வரை தடைசெய்யப்பட்டுள்ளது!
மாவட்டத்தில் நாளை காலையில் இருந்து மாலை 9 மணி வரை அனைத்து வர்த்தக நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சகல இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய.பௌத்த ஆலயங்களிலும் வருடாந்த உற்சவங்கள் நடத்த தடை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை காலை தொடக்கம் இரவு 9 மணிவரை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆலயங்கள் அனைத்து மதஸ்தானங்களிலும் ஆராதனைகள் உற்சவங்கள் இடம்பெற தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கூட்டத்திலே எவ்வாறு கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என விரிவாக ஆராயப்பட்டது. இந்த நிலையில் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின்படி எந்தவிதமான ஆலைய உற்சவங்களும் விழாக்களும் இடம்பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கைக்கு அமைய ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தாக்கள் ஆலய உற்சவங்களையே விழாக்களையே தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் இந்த நடைமுறை சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யும்வரை நடைமுறையில் இருக்கும்.
அதேவேளை பயணக்கட்டுப்பாடு தளர்தப்பட்டநிலையில் சில மாநகரசபை, நகரசபை வர்தகநிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கியது. இதனால் வேறு நேரங்களில் மூடுவதால் சில குளறுபடிகள் இருந்தது. இதற்கிணங்க நாளை காலையில் இருந்து மாலை 9 மணிவரை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
இரவு 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தகநிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை வர்த்தக உரிமையாளர்கள் வர்தக நிலையம் திறந்திருக்கும் நேரம் கண்டிப்பாக சுகாதார அறிவுறுத்தலை பேணி நுகர்வேரை அதிகமாக உள்வாங்காது முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்கவேண்டும் கைகழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இந்த செயற்பாடுகளை வர்த்தகநிலைய உரிமையாளர்கள் கவனம் செலுத்தாதுவிட்டால் அவர்கள் மீதும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
அதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 72 மரணங்கள் இடம்பெற்றுள்ளது.
எனவே இதனை பார்க்கின்ற போது கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இந்த மாவட்டம் முழுமையாக விடுபடவில்லை என அவர் தெரிவித்தார்.




