விஜய் இல்லாமல் துப்பாக்கி 2-ம் பாகம்!

Date:

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த படம் ‘துப்பாக்கி’. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய் இராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

தற்போது உருவாகி வரும் நடிகர் விஜய்யின் 65-வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை விஜய்க்கு திருப்தியாக இல்லாததால் முருகதாஸ் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நெல்சன் திலீப்குமார் ஒப்பந்தமானார். இப்படத்துக்கு ‘பீஸ்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்