யாழ். பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் முதல் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம் !

Date:

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்கள் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண் மரணத்தின் காரணம் என்ன?

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்