எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரா குற்றம் சாட்டினார்.
அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





