இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் சற்று முன்னர் அந்த சம்பவம் நடந்தது.
இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாயிலில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் வீதியில் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இது கைகலப்பாக மாறியது.
இதன்போது, பாதுகாப்பு உத்தியோகத்தரை அந்த நபர் தாக்கியதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார்.




