லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

Date:

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று (20) மதியம் 2 மணியனவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் காட் கல்லில் மோதியுள்ளது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் வீசப்பட்டுள்ளார். வீதிக்கு அருகாமையில் இருந்த ‘காட் கல்’ எனப்படுகின்ற எல்லை நிர்ணய கல்லில் தலைபட்டதாலேயே உயிரிழந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து வீசுபடும் போது தலைக்கவசமும் கழன்றுள்ளது.

படுகாயமடைந்த அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் வழியில் உயிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்