நாளை (21) அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வரும் ஜூலை 5ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும்.
இதன்படி, மாவட்ட ரீதியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதோ அல்லது மேலும் இறுக்கப்படுவதோ நடைமுறைப்படுத்தப்படும்.
சகல மாகாணங்களில் இருந்தும் 2 பேர் மாத்திரமே வீட்டை விட்டு வெளியில் செல்லலாம்.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பொது போக்குவரத்தில் 50% அளவானவர்கள் பயணிக்கலாம். வாடகை முச்சக்கர வண்டியில் 2 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
அலுவலக கூட்டங்களில் 10 மட்டுமே கலந்து கொள்ளலாம். பட்டறைகள், கருத்தரங்குகளில் 25 பேர் கலந்து கொள்ளலாம். மேல் மாகாணத்தில் இவற்றிற்கு அனுமதியில்லை.
குறைந்த பட்ச ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கவும், அத்தியாவசிமற்றவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் ஊக்குவிக்கப்படும். ஊழியர்களின் அளவை நிறுவன தலைவர் தீர்மானிக்க வேண்டும்.
திருமண நிகழ்வுகளிற்கு அனுமதியில்லை. மணகன், மணமகள் உள்ளிட்ட 10 பேருடன் பதிவு திருமணம் செய்யலாம்.
சடலம் ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் இறுதிக்கிரியை மேற்கொள்ள வேண்டும்.அதிகபட்சமாக 15 பேர் மாத்திரமே பங்குபெற்றலாம்.
நிதி நிறுவனங்கள் தேவையான ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும். ஒரு சந்தர்ப்பத்தில் 10 மாத்திரமே வாடிக்கையாளர்கள் உள்ளே அழைக்கப்படலாம்.
பொருளாதார மத்திய நிலையங்கள், வாராந்த சந்தைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கும்.
ஆடைத் துறை போன்ற தொழில்சாலைகளில் உயிர் குமிழி நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
முன்பு மூடப்பட்ட பல நிறுவனங்கள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயம், தோட்டங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடைகள், கராஜ்கள், சேவை நிலையங்கள், மர ஆலைகள், கட்டுமான கடைகள் மற்றும் சலவையகம், முடிதிருத்தும் கடைகள் மற்றும் துணிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்.
எவ்வாறாயினும், அத்தகைய இடங்களுக்காக கடுமையான நிபந்தனைகளுள்ளன.
ஜிம்கள், உட்புற அரங்கங்கள், குளங்கள், தனியார் உட்புற நிகழ்வுகள், மத இடங்கள், நூலகங்கள், சினிமா அருங்காட்சியகங்கள், உணவகங்களில் உணவருந்துதல், உட்புற கூட்டங்கள், விடுதிகள் மற்றும் பார்கள், சூதாட்ட விடுதிகள், கிளப்புகள், பந்தய மையங்கள், ஸ்பாக்கள் மற்றும் ஹோட்டல்கள் ஓய்வு இல்லங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் திறக்க அல்லது செயல்பட அனுமதிக்கப்படாது.




