கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும் என்று மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து உதவி ஆணையர்கள், மதுவரி திணைக்கள கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மதுவரி திணைக்கள பொதுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது
அதன்படி, சில்லறை விற்பனை உரிமம் (F.L 4) மற்றும் சில்லறை விற்பனைக்கான பியர், ஸ்டவுட் மற்றும் வைன் உரிமம் (22A) திறக்க அனுமதிக்கப்படும்.




