நேற்று 2,436 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 230,692 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,419 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 17 நபர்களும் நேற்று COVID-19 க்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது, 34,173 பேர் நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 1,667 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 194,145 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 1,399 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.




