கிளிநொச்சியில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

Date:

கிளிநொச்சி புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் நேற்று காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் அதன் போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அயலில் உள்ள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்றும் தேடுதல் இடம்பெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த நபர் பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்துலிங்கம் அருமைநாதன் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...

பேருந்து விபத்தில் இருவர் பலி

கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்