திருமணம் எப்போது ? சீக்ரெட்டை உடைத்த நடிகை டாப்ஸி !

Date:

தனது திருமணம் குறித்த சில ரகசியங்களை நடிகை டாப்ஸி உடைத்துள்ளார்.

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம்‌ அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்தியில் பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற படங்களில் நடித்து பிசியாகிவிட்டார். டாப்ஸியின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை ‌பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் ‘டூ-பாரா’, ‘லூப் லாபெட்டா’, மற்றும் ‘சபாஷ் மித்து’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படங்களை வெளியாக உள்ளது

திருமணம் எப்போது ? சீக்ரெட்டை உடைத்த நடிகை டாப்ஸி !

இந்நிலையில் தனது திருமணம் குறித்த சில ரகசியங்களை நடிகை டாப்ஸி உடைத்துள்ளார். இப்போதைக்கு திருமணம் பற்றி சிந்திக்கவே இல்லை. வருடத்திற்கு ஐந்து படங்கள் வரை நடித்து வருகிறேன். அது எப்போது இரண்டாக குறைகிறதோ, அப்போதுதான் திருமணம் குறித்து யோசிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தனது மார்க்கெட் குறைந்தால் மட்டுமே திருமணம் என்பதை சூசகமாக டாப்ஸி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்