நாட்டை திறந்து விடுமாறு நடு வீதியில் உட்கார்ந்த பிக்கு!

Date:

கொரோனா தொற்று பரவாமலிருக்க அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ 9 வீதி நடுவே அமர்ந்தவாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தம்புள்ளை நகரில் இன்று திங்கட்கிழமை முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்தி வருவதோடு பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

திம்புலாகல விகாரையின் விகாராதிபதியான மாத்தளை சாஷனரத்தன தேரரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் கடும் சொற்களால் விமர்சித்தார்.

அவரை அங்கிருந்து அகற்ற தம்புள்ளை நகரசபை முதல்வர் நேரில் வந்து பேசினார்.

பின்னர் ஜனாதிபதி செயலகத்துடன் தொலைபேசியில் பேச வசதியேற்படுத்தி தருவதாக கூறி, அங்கிருந்து தம்புள்ளை நகரசபைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்